சூரிச்சில் போதைப்பொருட்கள் மீட்பு : ஒருவர் சிவில் போலீசாரால் கைது.! புதன்கிழமை மாலை, ஜனவரி 24, 2024 அன்று, ஜூரிச் நகர போலீஸார் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் வியாபாரியை மாவட்டம் 4 இல் கைது செய்து கிட்டத்தட்ட 2 கிலோகிராம் கோகோயினைக் கைப்பற்றினர்.
இரவு 8:45 க்கு சற்று முன்னர், அங்கர்ஸ்ட்ராஸில் ஒரு வாகனத்தில் இருந்து ஒரு பெண்ணிடம் போதைப்பொருள் ஒப்படைக்கப்படுவதை சிவில் புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் 37 வயதுடைய நபரை கைது செய்து மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.