சுவிட்சர்லாந்தின் க்ளோட்டன் (Kloten) நகரில் வருகிற மே 10 ஆம் திகதி “நீளிரா” திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் இயக்குநருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள “தீரா” திரைப்படம், 1988ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரே இரவில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் ராணா டக்குபட்டி இணைந்து வழங்குகின்றனர். திரைப்பட திரையிடலுடன், இயக்குநர் சோமிதரனுடன் நேரடி கலந்துரையாடல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு வரும் 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு க்ளோட்டன் (Kloten) நகரிலுள்ள Cinema Claudia அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ் திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஈழத் தமிழ் வரலாற்றை மையமாகக் கொண்ட படைப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
