ஜெனிவா நகரத்தில் மீறப்படும் சட்டம் – மக்கள் விசனம்.!! ஜூன் 1 2023 முதல் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரம் உட்பட மாகாணத்தின் வெளிப்புற பகுதிகளில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா கேள்வி எழுந்துள்ளது.-
ஜூன் 1இ 2023 லிருந்து, ஜெனீவா நகரம் உட்பட, கன்டனின் 45 நகராட்சிகளில், சில வெளிப்புற இடங்களில், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் உட்பட – புகைபிடித்தல் இனி அனுமதிக்கப்படாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக, ‘புகை தடை’ மண்டலங்களான விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், வெளிப்புற நீச்சல் குளங்கள் மற்றும் பார்கள் என்பன அடங்கும். மேலும் பொது போக்குவரத்து நிறுத்தங்களில் மக்கள் புகைபிடிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த சட்டம ‘புகைபிடித்தலுக்கு எதிராக,மக்கள்தொகையின் பாதுகாப்பை, குறிப்பாக இளைஞர்களின் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆரோக்கியமான, புகை-இல்லாத வெளிப்புற சூழலை உருவாக்குகிறது’ என்று கன்டோன் அறிவித்திருந்தது.
புதிய சட்டத்தை பொதுமக்களுக்கு நினைவூட்ட, தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதுமான அறிவிப்பு பதாதைகள் இருப்பதை உறுதிசெய்ய, வணிகங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு ஆறு மாதங்கள் – அதாவது ஜனவரி 1, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் பேருந்து மற்றும் டிராம் நிறுத்தங்களில் ‘நகர மையத்தில், புகைபிடிப்பது இன்னும் மக்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது புகைப்பிடிக்காமல் இருப்பவர்களிளுடைய அறிகுறிகள் மிக அரிதாகவே காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊடகம் ஒன்று இது தொடர்பாக மக்களிடம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், இது பற்றி குறித்த ஊடகத்திற்கு ஒருவர் சுட்டிக்காட்டியபோதுஇ பொதுப் போக்குவரத்துக் காத்திருப்புப் பகுதிகளில் இருந்து சிகரட் சாம்பல் தட்டுகளை கூட இன்னும் அகற்றவில்லை. மேலும் புதிய சட்டம் தொடர்பாக அறிப்பு பலகைகளையும் வைக்கவில்லை. இதனால் சட்டத்தை அமுல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என புலப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் புகைப்பிடிப்பவர்கள் சிகரட் துண்டுகளை வீதியிலும் வீசிவிட்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாற செயற்பாடுகள் பொதுமக்களால் இப்பகுதியில் சிகரட் பிடிக்க முடியும் அல்லது அதற்கான தடை இல்லை என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, புகைபிடிப்பதற்கான அனுமதியை எடுத்துக்கொள்ளுகிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.