லுசேர்னில் போக்குவரத்து கண்காணிப்பு: கவனச்சிதறல் காரணமாக பல அபராதங்கள்
சுவிட்சர்லாந்தின் லுசேர்ன் கன்டோனில், “கவனச்சிதறல் உயிரைக் கொள்ளலாம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Kantonspolizei Luzern புதன்கிழமை (29 ஏப்ரல் 2026) விரிவான போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொண்டது.
கன்டோன் முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுமார் 250 வாகனங்களும் 270 நபர்களும் பரிசோதிக்கப்பட்டனர். இதனுடன், பல இடங்களில் வேகக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 17 வழக்குகள் சாலை போக்குவரத்து சட்ட மீறல்களாகவும், ஒன்று வேக வரம்பு மீறலாகவும் உள்ளது. மேலும், பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டதற்காக 196 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 44 சம்பவங்கள் வாகனம் ஓட்டும் போது ஏற்பட்ட கவனச்சிதறலுடன் தொடர்புடையதாக பதிவாகியுள்ளது. மொபைல் போன் பயன்படுத்துதல், ஓட்டும் போது கவனம் சிதறுதல் போன்றவை இவ்வகை மீறல்களில் முக்கிய காரணங்களாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் இந்த மாதிரியான கண்காணிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனம் ஓட்டும் போது முழு கவனம் அவசியம் என்பதையும், சிறிய தவறுகளே பெரிய விபத்துகளுக்கு காரணமாக முடியும் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் நினைவூட்டுகிறது.