பாசல் சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம் சுவிட்சர்லாந்தின் பாசலில் உள்ள பாஸ்லர்குட் (Bässlergut) சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
37 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 22 வயதான துனிசியா பிரஜை ஒருவரும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறு இவர்கள் தப்பிச்சென்றார்கள் என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. கொலை முயற்சி, கொள்ளை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் தேடுதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேடப்படும் நபர்கள் அல்லது அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கக்கூடிய எவரும், Basel-Stadt கன்டோனல் பொலிஸ் தொலைபேசியான 061 267 71 11, இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.