Lausanne நகரில் வாழும் மக்களை திடுக்கிட வைத்த சம்பவம் சுவிஸ் நகரமொன்றில், அதிகாலையில் சைரன் ஒலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தார்கள் மக்கள்.
சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் வாழும் மக்கள், நேற்று அதிகாலை பலத்த சைரன் ஒலிகேட்டு திடுக்கிட்டு கண் விழித்தார்கள்.
தொடர்ந்து பல சைரன்கள் ஒலிக்கவே, திகைத்துப்போன மக்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள்.

சைரன் நின்றாலும், மக்களுடைய தொலைபேசி அழைப்புகள் தொடர, அவர்களுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் பொலிசாருக்கு போதும் போதும் என்றாகியிருக்கிறது.
ஏதோ கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சைரன்கள் தவறாக ஒலிக்கத் துவங்கியுள்ளன.
பின்னர், மொபைல் ஆப்கள் மூலம், எந்த ஆபத்தும் இல்லை என மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்தே மக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.
இதே போன்று அண்மையில் சென்காலன் பகுதியில் உள்ள ஒரு பிரதேசத்திலும் தவறுதலாக சைரன்கள் ஒலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.