சுவிஸ் தமிழர் இல்லம் நடாத்தும் தமிழீழ கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா.!! சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்தும் தமிழீழ கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா 2024 எதிர்வரும் 10, 11 திகதிகளில் வின்டர்தூர் நகரில் இடம்பெற இருக்கின்றது.
இவ்விழாவுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி கழகங்கள் களமாட உள்ளதாகவும் சுவிஸ் தமிழர் இல்லம் அறிவித்துள்ளது.

குறிந்த விளையாட்டு விழாவில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்துதுடுப்பாட்டம் பெண்கள் உதைப்பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகள், மற்றும் தமிழர் தேசிய விளையாட்டுகள் என்பன மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெறவிருக்கின்றது.
உதைபந்தாட்டத்தின் இறுதிபோட்டிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.