விபசார விடுதிகள் தொடர்பாக லவுசானில் வெளியான அறிவிப்பு மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லௌசானில், விபச்சார விடுதிகள் எங்கு அமையலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு உள்ளூர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஒரு சொத்து நிறுவனம் ஒரு பழைய முதியோர் இல்லத்தை விபச்சார விடுதியாக மாற்ற முயற்சித்ததை அடுத்து இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Keystone / Georgios Kefalas
பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற இடங்களுக்கு 100 மீட்டருக்குள் இதுபோன்ற நிறுவனங்களை தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில், விபச்சாரம் 1942 முதல் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கையின் சட்டபூர்வமான வடிவமாக அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது- ஆனால் விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் அதற்கு முறையான அனுமதிகள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.