பாசல் மாகாணத்தில் உள்ள லாஃபென்டல் பள்ளத்தாக்கில் உள்ள SBB கட்டுமான தளத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் கிலோ கணக்கில் வெடிபொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் (அட்டர்னி) Attorney General of Switzerland அலுவலகம் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
KEYSTONE/Ti-Press/Pablo Gianinazzi (Symbolbild)
சுவிட்சர்லாந்தின் Attorney General of Switzerland அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்திற்கு இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
பாசல் மாகாணத்திலுள்ள கிரெலிங்கன் மற்றும் டக்கிங்கன் இடையே இரட்டைப் பாதையை அமைப்பதற்காக அமைக்கும் நடவடிக்கைகளுக்காக பாறைகளுக்கு வெடிவைத்து தகர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஃபெடரல் அலுவலகம் , பாசல் போலீஸ் மற்றும் பிற அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் வழக்கை விசாரித்து வருகிறது.