பாசலில் 30 வயது ஆடவரைக் கொள்ளையடிக்க முயன்ற பெண் நவம்பர் 2, 2024 சனிக்கிழமை மாலை, பாசலில் உள்ள Claraplatz (கிளாராப்ளாட்ஸில்) கொள்ளை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவு 9 மணியளவில், Greifengasse இல் உள்ள ATM இல் பணம் எடுக்கவிருந்த 30 வயதுடைய நபரை ஒரு பெண் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அந்த மனிதன் தனக்குப் பின்னால் சந்தேகப்படும்படியாக யாரோ நிற்பதைக் கவனித்ததை தொடர்ந்து அவர் கத்திமுனையில் மிரட்டியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, ஒரு வழிப்போக்கர் அங்கு வந்து தலையிட்டார். அவரது உதவியுடன், போலீசார் வரும் வரை அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, சம்பவ இடத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் 32 வயதான சுவிஸ் பெண் எனவும் காயமடைந்தவர் 30 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***