சுவிற்சர்லாந்தில் சூரிச் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் நேற்றைய தினம்(22.11.2024) தாயக மண்மீட்புப் போரில் வீரகாவியமான மானமாவீரர்களின் புனித வாரத்தின் இரண்டாம் நாளில் மாவீரருக்கான வணக்க பூஜை நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது..
சிவன் ஆலயத்தின் வரலாற்றில் 30ஆண்டுகளாக பிரதி வெள்ளி தோறும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது வழமை அந்த அடிப்படையில் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27க்கு முதல் வருகின்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள தாயக கனவுடன் சாவினை தழுவியோர் நினைவாலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த அடிப்படையில் நேற்றைய தினம் ஏழு மணிக்கு சூரிச் சிவன் ஆலயத்தில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிவபெருமான் உள் வீதி உலா வந்து இருப்பிடத்தில் அமர்ந்த போது சரியாக எட்டு மணி அளவில் ஆலயத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஆலய சைவத்தமிழ்ச் சங்க சிவத் தொண்டர் திரு.தி.திருநாமசிங்கம் அவர்கள் தலமையில் மாவீரர் வணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின….
திரு.சாம்பசிவம் அவர்களால் மாவீரர் பள்ளியெழுச்சி பாடப்பட்டது தொடர்ந்து பறை ஒலி ஒழிக்கப்பட்டது அங்கே இருந்த அடியார்களிடம் நெய் விளக்குகள் வழங்கப்பட்டு துயிலும் இல்ல பாடல் ஒலிக்கின்ற போது எல்லோரும் உணர்வுபூர்வமாக கையில் நெய் விளக்கை ஏந்தியவாறு மாவீரச் செல்வங்களை மனதில் எண்ணி வணங்கிக் கொண்டிருந்தார்கள்…



வழமையாக சிவாலயத்தில் பிரதி வெள்ளிதோறும் ஒலிக்கப்படுகின்ற அறத்தமிழ் அழகே போற்றி என்கின்ற பாடல் ஒலிக்க விடப்பட்ட போது எல்லோரும் சிவன் ஆலயத்தின் பிரதான மூலஸ்தானத்தை சுத்தி வந்து தாயக கனவுடன் சாவினை தழுவியோர் நினைவாலயத்திலே நெய் விளக்குகளையும் வைத்து மலர் தூவினர்…
இதற்கு முன்னதாகபிரதான ஈகைச் சுடரினை மாவீரரின் சகோதரர் திரு.சந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு.சக்தி அவர்கள் மலர் வணக்கத்தை ஆரம்பித்து வைக்க பக்தர்களும் வரிசை கிரகமாக வந்து நெய் விளக்கேற்றி மலர் தூவி வணங்கினார்கள் அப்போது ஆலயக் கலைஞர்களால் மாவீரர் புகழ் பாடப்பட்டது
அரங்கிலே ஸ்ரீகவி நடனாலய ஆசிரியர் நெறிப்படுத்தலில் மாணவர்களின் மாவீரருக்கான வணக்கப் பாடலுக்கு நடன நிகழ்வு நடைபெற்றது…
நிகழ்வில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த மாவீரர் நினைவாலயம் எப்படி தோற்றம் பெற்றது தொடர்பாக நிகழ்வுகளுக்கு இடையே கூறிக் கொண்டிருந்தார்
சைவ தமிழ் சங்கத்தின் சார்பாக திரு.குமரன் அவர்கள் இன்றைய அரசியல் சூழல் சார்ந்தும்,
மாவீரர் நிகழ்வுகள் சார்ந்தும் உரையாற்றினார்….
நிகழ்வின் நிறைவாக
நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
இது போன்று 23.11.2024 சனிக்கிழமை
சூரிச் சிவன்கோவில்
சைவ தமிழ் சங்கத்தின்
இளம் தொண்டர் சபையினரால்
மாவீரர்களுக்கான வணக்கப் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
சுவிஸ்தமிழ்TV க்காக சூரிசில் இருந்து
திருமதி லதா-சிங்கம்
23.11.2024.