சூரிச் நகரத்தில் இன்று மாலை (பிப்ரவரி 7, 2023, செவ்வாய்கிழமை) பயணிகள் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி வீடு ஒன்றின் தோட்டத்தை சேதப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
சூரிச் நகர காவல்துறையின் கண்டுபிடிப்புகளின்படி, சூரிச் Bändlistrasse ல் மதியம் 1.30 மணியளவில் டெலிவரி வேனுக்கும் பயணிகள் காருக்கும் இடையே விபத்து ஏற்பட்டது ஏற்பட்டது.
சூரிச் நகரத்தில் கார் விபத்து
பயணிகள் காரின் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு வெளியேறி, ஒரு வீட்டின் வேலியின் வழியாக மோதி, இறுதியாக ஒரு குடும்பத் தோட்டத்தில் கவிழ்ந்து நின்றது.
[the_ad id=”6060″]
அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்தபோது பாதிக்கப்பட்ட தோட்டப் பகுதியில் ஆட்கள் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது. சூரிச் கன்டோன் போலீசார் விபத்து பற்றிய மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விபத்தினை ஏற்படுத்திய ஓட்டுனர்களையும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்சென்றதாக குறிப்பிட்டார்கள்.
சூரிச் நகரத்தில் கார் விபத்து
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.