கன்டோன் சுக்கில் ஞாயிற்றுக்கிழமை காலை, அக்டோபர் 27, 2024 அன்று, உள்ளூர் உணவகங்களில் இரண்டு கொள்ளைச்சம்பவங்கள் மற்றும் கார் திருட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். சந்தேகநபர்கள் 15 வயது மற்றும் 18 வயதுடைய மொராக்கோ பிரஜைகள் என தெரியவந்துள்ளது.
காலை 6:00 மணியளவில் ஐந்து பேர் கொண்ட குழு (Baar) பாரில் உள்ள டோர்ஃப்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் ஜன்னலை அதன் வழியாக கல்லை எறிந்து உடைத்ததில் இந்த சம்பவம் தொடங்கியது.
அவர்களில் இருவர் உணவகத்திற்குள் நுழைந்தனர், ஆனால் எதையும் எடுக்காமல் விரைவாக வெளியேறினர். இந்த உடைப்பை நேரில் பார்த்த ஒருவர், போலீசில் புகார் செய்தார். இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதலின் போது இரண்டு பேரை Baar – பார் ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அதே குழு அன்றிரவின் பிற்பகுதியில் Zug இல் Alpenstrasse இல் உள்ள ஒரு உணவகத்தில் மற்றொரு உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இங்கு, ஒரு ஜன்னலை உடைத்து, வளாகத்திற்குள் நுழைந்து, சுமார் 1,800 பிராங்குகள் மதிப்புள்ள பல மின்னணு சாதனங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
உணவக உடைப்புகளுக்கு மேலதிகமாக, அதே இரவில் Zug இல் Blasebergstrasse இல் (ப்ளாசென்பெர்க்) நிறுத்தப்பட்டிருந்த திறக்கப்படாத காரிலிருந்து ஒரு பொதியை அவர்கள் திருடியதாக நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் இப்போது காவலில் உள்ளனர், மேலும் Zug அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Source:- Polizei Zug