கன்டோன் சொலுத்தூனில் வீதியில் தீக்குளித்து நபரால் பரபரப்பு இன்று புதன்கிழமை செப்டம்பர் 11, 2024 அன்று, மதியம் 12:30 மணிக்குப் பிறகு, கன்டோன் சொலுத்தூர்ன் ஹெகன்டோர்ஃபில் ஒரு நபர் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சொலுத்தூர்ன் கன்டோனல் காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக, கன்டோனல் போலீஸ், மீட்பு சேவை, ஒரு அவசர மருத்துவர், மற்றும் (Untergäu) உன்டர்கௌவ் பிராந்திய தீயணைப்புத் துறையின் உறுப்பினர்கள், ரேகா வானூர்தி மற்றும் ஒரு பராமரிப்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்தனர்.

அங்கு பலத்த காயம் அடைந்த நபர் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று ரேகா மீட்பு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சொலுத்தூர்ன் மாகாணத்தில் உள்ள காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உடனடியாக அந்த நபரின் சூழ்நிலைகள் மற்றும் அடையாளம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்தது.
தற்போதைய அறிவின்படிஇ இந்த சம்பவத்தில் மூன்றாம் தரப்பினரின் யாரும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.