சூரிச்சில் பட்டாசு வெடித்ததில் 12 வயது குழந்தை படுகாயம். சூரிச் கன்டோன் Fällanden பகுதியில் திங்கட்கிழமை மாலை (ஜனவரி 1, 2024) பட்டாசு வெடித்ததில் 12 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்குப் பிறகு, பட்டாசு வெடித்ததில் ஒரு குழந்தை காயமடைந்ததாக சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கிடைத்தது.
அவசரகால சேவைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் கை மற்றும் முகத்தில் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை. சூரிச் கன்டோனல் போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். சூரிச் கன்டோனல் பொலிஸுடன் உஸ்டர் மருத்துவமனை மீட்பு சேவையும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.