சுவிட்சர்லாந்தின் Zürcher Kantonalbank இப்போது கிரிப்டோகரன்சி வணிகத்திலும்காலடி எடுத்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Zürcher Kantonalbank வாடிக்கையாளர்கள் இப்போது கிரிப்டோகரன்ஸிகளை வாங்கி தங்கள் கணக்குகளில் வைத்திருக்கலாம்.
இது பற்றி குறித்த வங்கி மேலும் தெரிவிக்கையில், Deutsche Börse குழுமத்தின் துணை நிறுவனமான Crypto Finance உடனான ஒத்துழைப்பால் இது சாத்தியமானது.

இது வாடிக்கையாளர்களுக்கு Bitcoin மற்றும் Ethereum ஆகியவற்றை உடனடி நடைமுறைக்கு கொண்டு வர்த்தகம் செய்யவும், சேமிக்கவும் உதவுகிறது.
(சுக், லுசேர்ன், சென்ட்காலன்) Zug, Lucerne மற்றும் St. Gallen கன்டோனல் வங்கிகள் போன்ற பிற கன்டோனல் வங்கிகள் சில காலமாக கிரிப்டோகரன்சிகளுக்கான சேவைகளை வழங்கி வருகின்றன.
Zürcher Kantonalbank “உலகளாவிய வங்கியாக”, அது தனது வாடிக்கையாளர்களுக்கு “அனைத்து தொடர்புடைய நிதி சேவைகளையும்” வழங்க விரும்புவதாகவும் குறித்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.