Zug இல் பெண் மீது பாலியல் வல்லுறவு : தப்பிய நபர் திடீர் மரணம்.!!! சனிக்கிழமை, நவம்பர் 23, 2024 அன்று, Zug நகரில் ஒரு பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 26 வயதான ஆண் ஒருவர் 32 வயது பெண்ணை Alpenstrasse இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகளுக்காக அத்துமீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து, சந்தேகத்திற்குரிய குற்றவாளி கட்டிடத்தின் உள் வாசல் பகுதியில் சடலமாக கிடப்பதை போலீசார் அவதானித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் சனிக்கிழமை மதியம் , பாலியல் குற்றத்திற்கு ஆளான அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். குற்றவாளி அவளை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தியதாக பெண் போலீசாரிடம் முறையிட்டார்.

அந்தப் பெண் குடியிருப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பாக பாதுகாப்பாக தப்பித்து வந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
குற்றவாளி என்று கூறப்படும் சந்தேக நபர் குறித்த குடியிருப்பு கட்டிடத்துக்குள் ஒளிந்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து போலீசார் அந்த கட்டிடத்தை சோதனை செய்தனர். தேடுதலின் போது, அவசரகால சேவையினர் வீட்டின் உள் வாசலில் உயிரற்ற நிலையில் 26 வயது ஆண் இருப்பதைக் கண்டறிந்தனர்.
#### குற்றவாளி எப்படி இறந்தார்?
விசாரணையில், அந்த நபர் படிக்கட்டில் உள்ள ஜன்னலில் இருந்து 15 மீட்டர் ஆழத்தில் விழுந்தது தெரியவந்தது. மூன்றாம் தரப்பினரால் இது நிகழ்த்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
எனவே குற்றவாளி படிக்கட்டில் உள்ள ஐன்னல் வழியாக தப்பிச்செல்லும் முயற்சியில் தவறி கீழே விழுந்தமையால் மரணம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலியல் குற்றத்தின் சரியான சூழ்நிலைகள் மற்றும் மனிதனின் மரணம் தற்போது Zug காவல்துறை மற்றும் Zug கன்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(c) zuger-polizei