சுவிட்சர்லாந்தில் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலியான தங்க நாணயங்களை 5200 பிராங்குகளுக்கு விற்பனை செய்ததாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலியான பொருட்களை மோசடியான முறையில் விற்பனை செய்தார் என இந்த பெண் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த பெண்ணுக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக இவ்வாறு மோசடி செய்ததாக குறித்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன் நீதிமன்ற கட்டணங்களையும் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.