Winterthur ZH இல் ஓய்வின்றி ட்ரக் ஓட்டியவரை தடுத்த போலீசார் – ஓய்வின்றி தொடர்ச்சியாக ட்ரக் வண்டியை ஓட்டி சோர்வடைந்த ஓட்டுனரை வின்டத்தூர் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்: இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-
விண்டர்தூர் நகரக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை காலை வுல்ப்லிங்கனில் கடும் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 9 மணிக்கு சற்று முன் துருக்கியைச் சேர்ந்த 35 வயது டிரக் டிரைவரை போக்குவரத்து போலீஸ் தடுத்து நிறுத்தினர்.
குறித்த ஓட்டுனர் 23 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓய்வின்றி ட்ரக் வண்டியை செலுத்தியதன் காரணமாகவும் இந்த நேரத்தில் அவர் 1400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Winterthur ZH இல் ஓய்வின்றி ட்ரக் ஓட்டியவரை தடுத்த போலீசார் .!!
இவ்வாறான ட்ரக் ஓட்டுனர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் அதிகபட்சம் 15 மணிநேரம் மட்டுமே. தினசரி ஓட்டும் நேரமான 18 மணி 48 நிமிடங்களையும் அவர் கடந்துள்ளதாக போலீசார் அவர் மீது குற்றம் சுமத்தினர்.
கூடுதலாக அந்த நபர் கடந்த சில நாட்களில் ஓய்வு கால விதியை பலமுறை மீறியதாக கூறப்படுகிறது.
அவரது வாகனமும் சட்டவிரோதமாக சாலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுவரை மொத்தத்தில் டிரக் டிரைவர் வேலை மற்றும் ஓய்வு நேர விதியை 14 முறை மீறியதாக கூறப்படுகிறது. அவர் மீது விண்டர்தூர் நகர போலீசார் புகார் அளித்தனர்.
அடுத்த திங்கட்கிழமை பரிந்துரைக்கப்பட்ட ஓய்வு காலத்திற்குப் பிறகுதான் ஓட்டுநர் தனது பயணத்தைத் தொடர முடியும்.