மைக்ரோசாஃப்ட் கிளவுட் திட்டத்துக்கு எதிர்ப்பு உயரும் – தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய சுயாட்சிக்கு அச்சம்
சுவிட்சர்லாந்து அரசு தனது முழு தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பையும் மைக்ரோசாஃப்ட் கிளவுட் பிளாட்ஃபார்முக்கு மாற்ற தீர்மானித்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசுத் துறையின் மின்னஞ்சல்கள், காலண்டர்கள் மற்றும் உள்துறை ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்டின் சர்வர்களின் வழியாக பரிமாறப்பட வேண்டி வரும். இதுவே தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நாட்டின் சுயாட்சிக்கே ஆபத்தாக இருக்கும் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து கணக்காய்வாளர் நீதிமன்றம் (Federal Court of Auditors) இதற்கு முன்பே பாதுகாப்பு சோதனைகள் போதுமானவையில்லை என குறிப்பிடியுள்ளது. அதேவேளை, சுவிஸ் இராணுவம் இந்தத் திட்டத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சுவிஸ் ஆயுதப்படைத் தலைவர் தோமஸ் சுஸ்லி (Thomas Süssli), மைக்ரோசாஃப்ட் வழங்கும் கருவிகள் இராணுவத் தேவைகளுக்கு “பயன்படுத்த முடியாதவை” என கூறியுள்ளார். பெரும்பாலான இராணுவத் தரவுகள் இரகசியமானவை என்பதால், வெளிநாட்டு நிறுவனங்களின் சர்வர்களில் அவற்றை சேமிப்பது பாதுகாப்பற்றதாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்குப் பதிலாக, சுவிட்சர்லாந்து தன்னுடைய சொந்த பாதுகாப்பான கிளவுட் தீர்வை உருவாக்க வேண்டும் என்பதே இராணுவம் மற்றும் நிபுணர்கள் வலியுறுத்தும் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் அரசுத் தரவுகள் நாட்டின் உள்நாட்டிலேயே பாதுகாப்பாக நிர்வகிக்கப்படலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
© Wrs