சூரிச் மாநிலம் ப்ஃபெஃபிகோனில் சாலை விபத்து: இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் உயிரிழப்பு
சூரிச் மாநிலத்தின் ப்ஃபபிகோன் (Pfäffikon ZH) பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை (3 நவம்பர் 2025) நடந்த கடும் சாலை விபத்தில், இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை சுமார் 4.30 மணியளவில் கெம்ப்ட்டால் சாலை (Kempttalstrasse) பகுதியில் ஒரு டெலிவரி வாகனம் மரத்தில் மோதியதாக அவசர அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப்படையினர், வாகனத்தின் உள்ளே வாகன ஓட்டுநர் மயக்க நிலையில் இருப்பதை கண்டனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது, ஆனால் அவர் அங்கு உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட விசாரணைகளின் படி, 53 வயது இலங்கை நாட்டு நபர் தனியாக ஃபேரால்டார்ஃப் (Fehraltorf) இருந்து ப்ஃபெஃபிகோன் நோக்கி வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதுவரை தெரியாத காரணத்தால் வாகனம் எதிர்புற பாதையில் சென்று சாலையின் இடது ஓரத்தைக் கடந்து நேராக ஒரு மரத்தில் மோதியுள்ளது.

விபத்தின் காரணம் குறித்து சூரிச் மாநில காவல்துறை மற்றும் See/Oberland பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. விபத்துக்குப் பிறகு சாலையில் சான்றுகள் சேகரிக்க சூரிச் மாநில காவல்துறையின் சிறப்பு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த விபத்தினால் கெம்ப்ட்டால் சாலை இருபுறத்திலும் காலை 8 மணி வரை மூடப்பட்டிருந்தது. ப்ஃபெஃபிகோன் மற்றும் ஃபேரால்டார்ஃப் தீயணைப்பு படையினர் போக்குவரத்துக்கு மாற்றுப்பாதையை ஏற்படுத்தினர்.
உஸ்டர் மருத்துவமனை அவசர சேவை, Regio144 மருத்துவ அவசர குழு, Rega ஹெலிகாப்டர், சட்டப் புலனாய்வாளர் மற்றும் அவசர ஆலோசகர் ஆகியோரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சுவிஸில் தெனாசிய வம்சாவளியினர் பணியாற்றும் வாகன ஓட்டுநர்கள் அதிகமான நிலையில், இத்தகைய விபத்துகள் சமூகத்தில் ஆழ்ந்த துயரத்தையும் பாதுகாப்பு விழிப்புணர்வின் தேவையையும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
© Kapo ZH