2026ல் சுவிஸ் பாஸ்போர்ட்டின் உலகளாவிய நிலை என்ன?
2026 ஆம் ஆண்டுக்கான உலக பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலின்படி, சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாகத் தொடர்கிறது. Henley Passport Index வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இன்றி அல்லது வருகை விசாவுடன் உலகின் 186 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.
இந்த அணுகல் வசதியின் அடிப்படையில், தரவரிசையில் இடம் பெற்ற 199 நாடுகளில் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது சர்வதேச பயண சுதந்திரத்தில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முன்னணியில் இருப்பதை காட்டுகிறது.
இந்நிலையில், இந்த மூன்றாவது இடத்தை சுவிட்சர்லாந்து தனியாகப் பெறவில்லை. டென்மார்க், லக்சம்பர்க், ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இதே அளவிலான விசா சலுகைகளைப் பெற்று, சுவிட்சர்லாந்துடன் இணைந்து இந்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

எனினும், சில நாடுகளுக்கு பயணம் செய்ய சுவிஸ் குடிமக்கள் இன்னும் முன் விசா பெற வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக அரசியல் நிலைமைகள், பாதுகாப்பு காரணங்கள் அல்லது குடிவரவு கட்டுப்பாடுகள் காரணமாக சில நாடுகள் விசா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
மொத்தத்தில், சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு உறவுகள், அரசியல் நிலைத்தன்மை மற்றும் நம்பகமான தூதரக கொள்கைகள் ஆகியவை சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட்டின் உயர்ந்த மதிப்புக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. உலகம் முழுவதும் சுதந்திரமாக பயணிக்க விரும்பும் சுவிஸ் குடிமக்களுக்கு, 2026லும் இந்த பாஸ்போர்ட் ஒரு முக்கிய ஆதரவாகவே உள்ளது.