சாலைப் போக்குவரத்தில் கவனச்சிதறல் – சூரிச் மாநில காவல்துறையின் எச்சரிக்கை
சூரிச் மாநில காவல்துறை, சாலைப் போக்குவரத்தில் கவனக்குறைவு ஏற்படுத்தும் அபாயங்களைப் பற்றி எச்சரித்துள்ளது.
பயணிக்கும் போது கவனம் முழுவதும் போக்குவரத்திலேயே இருக்க வேண்டும். வீடியோ கால் செய்வது, உணவு சாப்பிடுவது, குறுஞ்செய்தி எழுதுவது அல்லது வாசிப்பது – இவை அனைத்தும் பயணம் முடிந்த பிறகே செய்யப்பட வேண்டும்.
கவனச்சிதறல் விபத்துகளுக்கு காரணமாகிறது. “App-gelenkt” பிரச்சாரம் இந்த ஆபத்துகளைத் தெளிவாகக் காட்டுகிறது என காவல்துறை நினைவூட்டுகிறது. நீங்கள் கார் ஓட்டினாலும், சைக்கிளில் சென்றாலும் அல்லது நடைப்பயணமாக இருந்தாலும், எப்போதும் முழு கவனமும் போக்குவரத்திலேயே இருக்க வேண்டும் எனவும் சூரிச் கன்டோனல் போலீசார் விழிப்புணர்வு காணொளிகளையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.