சூரிச்சில் Langstrasse “லங் திராஸ்ஸ” பகுதியில் வன்முறை மோதல் – நைஜீரிய பெண் காயம்
செப்டம்பர் 17, 2025, புதன்கிழமை அதிகாலை “லங் திராஸ்ஸ” பகுதியில் வன்முறை சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் ஆபத்தான ஆயுதத்தால் காயமடைந்தார்.
காலை 5.30 மணிக்கு பின்னர், நகர காவல்துறையின் அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மோதல் குறித்து தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கடுமையான காயங்களுடன் 30 வயது நைஜீரியப் பெண்ணை கண்டுபிடித்தனர். அவர் உடனடியாக சூரிக் நகரின் அவசர மீட்பு சேவை சானிடேட் குழுவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயங்கள் தீவிரமாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தான நிலைமை குறித்த தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தின் பின்னணி மற்றும் நடந்த விதம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை.

இச்சம்பவத்தை ஆராய்ந்து ஆதாரங்களை சேகரிக்க சூரிக் குற்றவியல் ஆய்வு நிறுவனம் மற்றும் நீதிமருத்துவ நிறுவனம் சேர்ந்த நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். மேலதிக விசாரணையை சூரிக் நகர காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
காவல்துறை தற்போது சாட்சிகளைத் தேடி வருகிறது. பொதுமக்கள் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் கொண்டிருந்தால், உடனடியாக போலீசாரிடம் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© Kapo ZH