சுவிட்சர்லாந்தில் புதுப்பிக்கப்பட்ட கோவிட்19 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மருந்து பொருட்கள் ஆணையமான ஸ்விஸ்மெடிக் (Swissmedic) நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான மாடர்னாவின் புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியே இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்காக, இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாடர்னாவின் செய்தி வெளியீட்டை ஸ்விஸ்மெடிக் உறுதிப்படுத்தியது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Spikevax LP.8.1 என்ற இந்த COVID-19 தடுப்பூசியின் அங்கீகாரம், உற்பத்தி தரவு (CMC – Chemistry, Manufacturing and Control), மருத்துவ மற்றும் மருத்துவமல்லாத தரவுகள், மற்றும் மாடர்னாவின் mRNA COVID-19 தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை நிரூபிக்கும் நிஜ உலக தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
@Swissinfo