Glarus கன்டோனில் போதையில் வாகனம் செலுத்தியவர் விபத்து.! மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரால் நேற்றைய தினம் கன்டோன் கிளாரஸில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 21, 2023 சனிக்கிழமையன்று காலை 7:15 அளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது
Quelle der Meldung: Kapo GL
கிளாரஸ் டவுன்ஹாலுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் மது போதையில் பயணித்த 25 வயதான கார் ஓட்டுநர் ஒரு கணம் தூக்க கலக்கத்தில் வலது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்து சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த நபர் ஸ்வாண்டனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளதோடு மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.