சூரிச்சில் திருடப்பட்ட மஸராட்டி காருடன் தப்பிச்சென்ற இரு இளைஞர்கள் ஹார்ட் பிரிட்ஜில் விபத்தினை சந்தித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் தப்பிச்செல்ல முற்பட்ட போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், 19 மற்றும் 16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை சூரிச்சில் உள்ள மசெராட்டி வகை காரை திருடி காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காலை 8 மணிக்குப் பிறகு, ஒரு நகரக்காவல் ரோந்துபணியிணருக்கு குறித்த கார் திருடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் புச்செக்ப்ளாட்சில் குறித்த காரை கவனித்த போலீஸ் அதிகாரிகள் அவர்களை நிறுத்த முற்பட்டனர்.
(c)zueritoday(c)zueritoday(c)zueritoday
அதிகாரிகளை கவனித்த டிரைவர், உடனடியாக வேகத்தை கூட்டி அங்கிருந்து வேகமாக சென்றார். அவசர ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒலியுடன் போலீசார் அவர்களை துரத்திச்சென்றுள்ளனர். பின்னர் குறித்த கார் சூரிச்சில் உள்ள ஹார்ட் பிரிட்ஜில் மற்றொரு காரில் மோதி, போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த ஒரு சைக்கிள் ஓட்டுநரையும் மோதிவிட்டு தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டது.
விபத்திற்குப் பிறகு, இரு வாலிபர்களும் ஹார்ட்ப்ளாட்ஸ் நோக்கி தப்பியோடியபோது போலீசார் அவர்களை துரத்திப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 19 மற்றும் 16 வயதுடைய இளைஞர்கள் சுவிஸ் நாட்டவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.