ஜெனீவா விமான நிலையத்தில் 100 கிலோ போதைப் பொருளுடன் இருவர் கைது
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா விமான நிலயத்தில் 100 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் விமானப் பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சுங்க அதிகாரிகள் முதலில் 31 வயது ஸ்பெயின் நாட்டவர் ஒருவரின் இரு சூட்கேஸ்களை சோதனை செய்தனர். அதில் 53 கிலோகிராம் பொதியில் அடைக்கப்பட்ட போதை பொருட்களை மீட்டுள்ளனர்.
பின்னர், அதே விமானத்தில் பயணித்த 59 வயது பிரெஞ்சு நாட்டவர் ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் இரு சூட்கேஸ்களில் 53 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இரு நபர்களும் மற்றும் போதைப்பொருட்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா போதைப் பொருட்களே மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.