தடை இருந்தும் காப்பீட்டு நிறுவனங்களின் அனுமதியற்ற அழைப்புகள் தொடர்கின்றன
சுவிட்சர்லாந்தில் 2024 செப்டம்பர் 1 முதல் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் அனுமதியற்ற விளம்பர தொலைபேசி அழைப்புகள் (cold calls) சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நடைமுறை முழுமையாக நிறுத்தப்படவில்லை என்பது தற்போது வெளிச்சம் பார்த்துள்ளது.
நிதி சந்தைகளை கண்காணிக்கும் Swiss Financial Market Supervisory Authority (FINMA) அமைப்பின் தகவலின்படி, இந்த விதிமுறையை மீறும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த தொடர்பில் FINMA-வின் பேச்சாளர் Ursula Keel கூறுகையில், “இந்த விதிமுறையை மீறியதாகக் கூறப்படும் புகார்கள் எங்களிடம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
இந்த தடை இருந்தும் இத்தகைய அழைப்புகள் நீடிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இதுவரை விதிமுறையை மீறியவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாதது எனக் கூறப்படுகிறது.
இதனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.