ஜெர்மனியில் போக்குவரத்து வேலைநிறுத்தங்கள் சுவிட்சர்லாந்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இன்று மற்றும் நாளை இரண்டு தொழில்துறை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இரண்டு செயல்களும் சுவிட்சர்லாந்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் போக்குவரத்தை சீர்குலைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.
விமான பயணத்தை பொறுத்தமட்டில், பிராங்பேர்ட் மற்றும் ஹாம்பூர்க் விமான நிலையங்களில் இன்று, பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் ஹம்பூர்க் மற்றும் சூரிச் இடையிலான விமான சேவையும், பிராங்பூர்ட் மற்றும் சூரிச் இடையிலான விமானசேவை மற்றும் பிராங்பூர்ட் ஜெனீவா இடையிலான விமானசேவைகளும் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் சேவைகளை பொறுத்தமட்டில் டொச்ச வாண் சாரதிகள் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி வரை வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி மற்றும் அங்கிருந்து வரும் பல எல்லைதாண்டிய இணைப்புகள் இதனால் பாதிக்கப்படும் எனவும், ‘உள்நாட்டு போக்குவரத்து முடிந்தவரை குறைவாகவே பாதிக்கப்படுகிறது’ என்றும் சுவிஸ் தேசிய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமாத்திரமின்றி நாடு தழுவிய 24 மணி நேர பொது வேலைநிறுத்தம் இத்தாலியில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
விமானம், ரயில் மற்றும் பொது போக்குவரத்து பயணிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை தாமதங்கள் அல்லது பயணரத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சுவிசில் இருந்து இத்தாலிக்கு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் பயணத்தில் மாற்றங்களை செய்வது நல்லது.