இன்று சனிக்கிழமை பெப்ரவரி 3, 2024, கன்டோன் சென்காலன் கோல்ட்செஸ்ட்ராஸில் கார் மற்றும் போஸ்ட் பஸ் இடையே போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தின் காரணமாக பல ஆயிரம் பிராங்குகளுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 42 வயதுடைய நபரே காரினை ஓட்டிச்சென்று பக்கவாட்டில் பேரூந்துடன் மோதியவர் எனப்படுகிறது. எனினும் விபத்திற்கான சரியான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகள் கன்டோனல் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.