சுவிட்சர்லாந்தில் 12 பெண்களை துஷ்பிரயோகம் செய்த வைத்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை
சுவிட்சர்லாந்தில் மாற்று மருத்துவம் செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஃப்ரைபர்க் மாகாணத்தில், மாற்று மருத்துவம் செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறியுள்ளார் 58 வயது நபர் ஒருவர்.
சுமார் 12 பெண்களை துஷ்பிரயோகமும் செய்துள்ள அவருக்கு Châtel-saint-Denis (சாட்டல்-செயிண்ட்-டெனிஸ்) நீதிமன்றம் ஒன்று 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன், அவர் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கு 76’000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மன நல சிகிச்சை பெற அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் நோயாளிகளுடன் வேலை செய்ய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.