ஜெனீவா நகரத்தில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலத்தின் மீது ஒரு ஜோடி சண்டையிடுவதைக் கண்டதாக சாட்சிகள் பொலிஸிடம் தெரிவித்தனர்- அந்த நபர் அவ்விடத்தை விட்டு வெளியேறிய பின்னர் பெண் பாலத்தில் இருந்து கீழே தண்ணீருக்குள் குதித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மீட்பு படையினர் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிர் ஆபத்து எதுவும் இல்லை என தெரியவருகிறது.