சுவிட்சர்லாந்தில் சாட்ஜிபிடி ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் தொடர்ந்து பரவி வருகின்றன. முதல் முறையாக, சுவிஸ் மக்களில் பெரும்பான்மையினர் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இளைஞர்கள் வயதானவர்களை விட அடிக்கடி AI-ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் ஆண்கள் பெண்களை விட இதை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு மிகக் குறுகிய காலத்தில் அதிகளவு பிரபல்யமாக மாறியுள்ளது என டிஜிமானிட்டர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் முதல் முறையாக AI பயன்படுத்தும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வு 15 முதல் 75 வயது வரையிலான இணைய பயனர்களைப் பிரதிபலிக்கிறது.
குறிப்பாக, மக்கள் தொகையில் 60% பேர் இப்போது AI கருவிகளை குறைந்தபட்சம் எப்போதாவது பயன்படுத்துகின்றனர் எனவும் இது சுமார் 38 லட்சம் மக்களைக் குறிக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 40% மட்டுமே காணப்பட்டது. 15 முதல் 34 வயதுடையவர்களில் 79% பேர் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துகின்றனர், ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் இது 40% மட்டுமே என தெரிவிக்கப்படுகின்றது.
@KeystoneSDA