சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2,768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகமாகும்.
குடியேற்றத்திற்கான மாநில செயலகம் திங்களன்று அறிவித்த அறிக்கையின் படி, உக்ரைனில் இருந்து வெளியேறிய 90 பேருக்கு எஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஜனவரியில், உக்ரைனில் இருந்து 1,487 பேர் எஸ் பாதுகாப்பு அந்தஸ்து கோரி விண்ணப்பித்தனர்.
பாதுகாப்பு கோரிய 47 பேருக்குஇ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த மாதத்தில் 57 வழக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தின் கூற்றுப்படி, எஸ் பாதுகாப்பு நிலை செயல்படுத்தப்பட்டதிலிருந்து ஏற்கனவே 21,190 வழக்குகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 3,788 வழக்குகளில் மதிப்பாய்வில் உள்ளது. ஜனவரி மாத இறுதியில், மொத்தம் 65,587 பேர் பாதுகாப்பு நிலை எஸ் ஆக வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை கோரி பல்வேறு நாடுகளிலும் இருந்து விண்ணப்பங்கள் சேர்ந்துள்ளதாகவும் குடியேற்றத்திற்கான மாநில செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் ஆப்கானிஸ்தான் 793 விண்ணப்பங்கள், துருக்கி 501 விண்ணப்பங்கள், அல்ஜீரியா 224 விண்ணப்பங்கள், மொராக்கோ 143 விண்ணப்பங்கள், மற்றும் எரித்திரியா 142 விண்ணப்பங்கள் என ஜனவரி மாதம் புகலிடக் கோரிக்கையை சமர்ப்பித்த மக்களில் மிக முக்கியமான நாடுகளாகும்.
அறிவிப்பின்படி, ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,743 புகலிட விண்ணப்பங்களை குடியேற்றத்திற்கான மாநில செயலகம் பரிசீலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவற்றில் 732 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
666 பேர் புகலிடம் பெற்று அவற்றில் 555 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் மேலும் புகலிடக்கோரிக்கையாளர்களின் வழக்குகளின் எண்ணிக்கை 88 அதிகரித்து 15,655 ஆக தற்போது உள்ளது.
இது மாத்திரம் இன்றி ஜனவரியில் 844 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.