ஸ்டார்கிர்க்-வில் தொலைபேசி மோசடி: 46 வயது நபர் போலீசாரால் கைது
சொலுத்தூர்ன் கன்டோன் ஸ்டார்கிர்க்-வில் (Starrkirch-Wil), போலீசார் திங்கட்கிழமை மதிய நேரத்தில் நடந்த தொலைபேசி மோசடி சம்பவத்தில் 46 வயதான உக்ரைன் நாட்டவரை திடீரென தடுத்து, தொடர்ந்து விசாரணைக்காக கைது செய்தனர்.
இந்த சம்பவம் 17 நவம்பர் 2025 அன்று நடந்தது. ஒருவர் ஓய்வுபெற்ற பெண்மணியை அழைத்து, தாங்கள் சட்ட அமலாக்கத் துறையினரும் விசாரணை அதிகாரிகளுமாக நடித்து பல பொய்களை கூறியுள்ளனர். வங்கியிலிருந்து பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை (CHF) எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் ‘அதிகாரி’ ஒருவர் வந்து பணத்தைப் பெற்றுச் செல்வார் என்றும் நம்ப வைத்துள்ளனர்.
இச்செயலை பற்றிய தகவல் சொலுத்தூர்ன் கன்டோன் போலீசாருக்கு கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணத்தைப் பெற வந்த 46 வயது நபர் சம்பவ இடத்திலேயே போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்தில் “போலீசராக நடிக்கும் மோசடி”, “அவசர நிலை மோசடி”, “டெலிபோன் மோசடி” போன்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மூத்த குடிமக்கள் மற்றும் தனியாக வாழும் நபர்களை குறிவைக்கும் இந்த குழுக்கள், கதைகளை மாற்றி மாற்றி ஏமாற்றும் புது உத்திகளைப் பயன்படுத்துகின்றன.

போலீசார் பொதுமக்களுக்கு மீண்டும் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். தெரியாதவர்களின் அழைப்புகளை எப்போதும் சந்தேகத்துடன் அணுக வேண்டும். அழுத்தம் கொடுக்கப்படும் சூழலில் உடனே அழைப்பை நிறுத்துவது தவறல்ல; அது உங்கள் பாதுகாப்புக்கு அவசியமானது. பணம், வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது. தெரியாதவர்களுக்கு பணம் அல்லது மதிப்புள்ள பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக 117 என்ற எண்ணில் உண்மையான போலீசைத் தொடர்புகொள்ள வேண்டும்.
மோசடித் தந்திரங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும், ஏமாற்றுபவர்கள் முறைகளை மாற்றி மாற்றி செயல்படுவதால் எச்சரிக்கையாக இருவது மிக முக்கியம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் குற்றத் தடுப்பு அலுவலகத்தின் இணையதளத்தில் “போலியான போலீசர் மோசடி” உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று முறைகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
© Kantonspolizei Solothurn