பாசல் யூரோவிமான நிலையம் பகுதி மூடல்: விமான சேவைகள் கடுமையாக குறைப்பு
சுவிட்சர்லாந்து–பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள EuroAirport Basel-Mulhouse-Freiburg விமான நிலையம் முக்கிய ஓடுதளம் (runway) பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக செயல்பாடுகளை குறைத்துள்ளது. இன்று தொடங்கி மே 20 வரை நடைபெறும் இந்தப் பணிகளால் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியில், EasyJet மட்டுமே தனது சேவைகளைத் தொடர உள்ளது. அதுவும், குறுகிய இரண்டாம் நிலை ஓடுதளத்தை பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட பயண சேவைகளை வழங்கும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் வழக்கமான கோடைக்கால அட்டவணையுடன் ஒப்பிடும்போது விமான சேவைகள் கணிசமாக குறைக்கப்பட்டாலும், முக்கிய ஐரோப்பிய நகரங்களுடன் இணைப்புகளைத் தொடரும் வகையில் சில முக்கிய பயண வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் சேவை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயண திட்டங்களை சரிபார்த்து மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.