சுவிட்சர்லாந்தில் 30C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை.!! ஏப்ரல் மாதம் இப்போதுதான் தொடங்கியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் நாட்களில் அதிகளவான வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது இன்று வியாழன் முதல் ஆரம்பமாகி நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு சுவிட்சர்லாந்தில் 20 பாகை டிகரி வெப்பநிலையை தாண்டும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தினத்தன்று இந்த ஆண்டின் முதல் ‘கோடை’ நாளாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது கொன்ஸ்டான்ஸ் ஏரியைச் சுற்றி 22 முதல் 24 டிகரி வெப்பநிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில்இ எதிர்வரும் புதன்கிழமைவரையில் 25 டிகரி வரையிலான வெப்பநிலையுமஇ இன்னும் சில பகுதிகளில் 28 டிகரி வரை வெப்பநிலையும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.
கன்டோன் வாயிலாக வெப்நிலையை பொறுத்தவரையில் சூரிச்சில் 26 டிகரியும, ஜெனீவா மற்றும் பெர்ன் ஆகிய கன்டோன்களில் 25 டிகரியும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வெப்பநிலை குறைந்தபட்சம் 25 டிகரியாக இருந்தால், அது கோடை நாள் என்றும், 30 டிகிரியை எட்டினால், அது வெப்ப அலை நாள் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
ஆகையால் வரும் நாட்கள் 20 முதல் 30 வரையிலான வெப்பமான காலநிலையே எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் சஹாரா தூசிகளின் தாக்கமும் இருப்பதால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.