சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை உயர்வு – லுசேர்னிலும் பாசெல்லிலும் அதிகம், பெர்ன் மற்றும் சூரிச்சில் குறைவு
2025 ஜூன் மாதத்தில், சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் புதிய வீடுகளுக்கான வாடகைத் தொகைகள் உயர்ந்துள்ளதாக Homegate வாடகை குறியீட்டு அறிக்கை திங்கட்கிழமையன்று வெளியிட்டது.
மாநகரங்களில்,
- லுசேர்ன் நகரத்தில் வாடகைச் சதவீதம் +2.2% உயர்ந்தது.
- பாசெல் நகரில் +0.7% உயர்வு பதிவு செய்யப்பட்டது.
இதற்கேதிராக,

- பெர்னில் வாடகை -1%,
- ஜெனீவாவில் -0.9%,
- சூரிச்சில் -0.6% என சிறிதளவு குறைந்துள்ளது.
ஆண்டு முழுவதையும் பொருத்தவரையில், வாடகை கட்டணங்கள் பெரும்பாலும் உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- லுசேர்ன் நகரத்தில் ஒரு வருடத்தில் 5% உயர்வு,
- சூரிச்சில் 3.5% உயர்வு ஆகியவை முக்கியமான சுட்டிக்காட்டுகளாக இருக்கின்றன.
இந்த உயர்வுகள், சுவிட்சர்லாந்தில் வீட்டு தேவை அதிகரித்து வருவதையும், சில நகரங்களில் குறைந்த வீட்டு கிடைப்புகளையும் பிரதிபலிக்கின்றன.