சுவிட்சர்லாந்து புதிய பணத்தாள்களை வெளியிட தயாராகிறது
சுவிட்சர்லாந்து தேசிய வங்கி (SNB) 2030களின் தொடக்கத்தில் வெளியிடப்படவுள்ள 10வது பணத்தாள் தொடருக்கு “சுவிட்சர்லாந்து மற்றும் அதன் உயரங்கள்” என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த புதிய பணத்தாள்கள், சுவிட்சர்லாந்தின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் வகையில், ஜூரா மலைகள் முதல் ஆல்ப்ஸ் வரையிலான குறைந்த, நடுத்தர மற்றும் உயரமான மலைப்பகுதிகளை சித்தரிக்கும்.
2024 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், SNB சுவிஸ் மக்களை புதிய பணத்தாள்களுக்கான வடிவமைப்பு யோசனைகளை அனுப்புமாறு அழைப்பு விடுத்தது. இதற்கு பொதுமக்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் கிடைத்தன. இவற்றில் இருந்து 12 சிறந்த வடிவமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை இறுதி செய்யும் பணி ஜூலை 31, 2025க்குள் முடிக்கப்பட்டது.

இந்த புதிய வடிவமைப்புகள் இப்போது தயாராகி, அடுத்த சில வாரங்களில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த பணத்தாள்கள், சுவிட்சர்லாந்தின் இயற்கை பெருமையையும், பண்பாட்டு முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.