அமெரிக்கா சுங்க தீர்ப்பு : பதற்றத்துடன் காத்திருக்கும் சுவிட்சர்லாந்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பல நாடுகளுக்கு புதிய சுங்கக் கட்டணங்கள் குறித்த கடிதங்களை அனுப்பினார். ஆனால் சுவிட்சர்லாந்து அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. தற்காலிகமாக, சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 10% சுங்கம் மட்டுமே உள்ள நிலையில், இது தொடருமா அல்லது உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முந்தைய நிலைமையில், சுவிட்சர்லாந்துக்கு 31% வரையான சுங்கம் விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதைக் குறைத்து 10% ஆக வைத்திருப்பது சுவிஸ் வர்த்தக வட்டாரத்திற்கு ஒரு நிம்மதி அளிக்கிறது. எனினும், இது நிரந்தர தீர்வா, அல்லது தற்காலிகம் மட்டுமா என்பது ஆகஸ்ட் 1ஆம் தேதியில் வெளியிடப்படும் புதிய அறிவிப்பில் தெரியவரும்.

சுவிஸ்-அமெரிக்க வர்த்தக அறையின் இயக்குநர் ராகுல் சாகல் கூறுகிறார்: “சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டை எடுத்துக்காட்டு செய்வது சரியல்ல என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுவிட்டது.” அதேபோல, சுவிஸ் பொருளாதார அமைச்சர் கி. பார்மலின் கூறுகிறார்: “நான் இது குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்களுக்கான பெரிய ஆபத்து இல்லை.”
சுவிட்சர்லாந்து, அமெரிக்காவுக்கு முக்கியமான தொழில்துறை பொருட்கள், மருந்துகள் மற்றும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்கிறது. சுங்க உயர்வால் இந்த துறைகளுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சுவிட்சர்லாந்து அரசும், வணிகவட்டாரமும் மிக கவனத்துடன் அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
@Keystone SDA