அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அறிவிப்பால் சுவிஸ் பங்குச் சந்தையில் சரிவு
ஐரோப்பா முழுவதிலும் இன்றைய தினம் பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்கத்தில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தன. ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும், ஐரோப்பிய ஒன்றிய (EU) பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 30% கூடுதல் இறக்குமதி வரியினால் இந்த சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் வீழ்ச்சி சுவிஸ் பங்கு குறியீட்டான SMI நேற்று திங்கட்கிழமை காலை 9:40 am அளவில் 0.19% குறைந்து 11,915 புள்ளிகளாக இருந்தது. ஏனைய முக்கிய ஐரோப்பிய சந்தைகளும் இதையே பின்பற்றின. ஜெர்மனியின் DAX குறியீடு 0.66% குறைந்துள்ளதுடன், பிரான்சின் CAC குறியீடு 0.46% வீழ்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறு வரிவிதிப்புகள் வந்துள்ள போதும், சந்தைகளின் எதிர்வினை மிகவும் அதீதமானதல்ல. காரணம், EU நாடுகளின் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பழக்கமான பேச்சுவார்த்தை உத்திகள்.
இது சந்தைகளில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில், அமெரிக்க வரிநிலைகளுக்கான பேச்சுவார்த்தை முடிவுகளை எதிர்நோக்கிய காத்திருப்பு தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.