சுவிஸ் ரயில்கள் விலங்குகளுக்கான எச்சரிக்கை ஒலித் திட்டத்தை நிறுத்தியது
சுவிட்சர்லாந்து தேசிய ரயில்வே நிறுவனம் (SBB), விலங்குகளை அணுகும் ரயில்களில் இருந்து எச்சரிக்கச் செய்வதற்காக பரிசோதனையாக பயன்படுத்திய ஒலிக் குறியீட்டு முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் சூரிக் மாநிலத்தின் வின்டர்தூர் முதல் ஷாஃப்ஹவுசனின் ஸ்டெய்ன் ஆம் ரைன் வரை இயங்கியது.
அந்த அமைப்பு, காட்டு விலங்குகளை அவர்களின் சொந்த இன ஒலிகளின் மூலம் எச்சரித்து, ரயில்கள் மோதும் அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, காட்டு பன்றிகளின் ஒலிகளை ஒலிப்பதன் மூலம் அவற்றை தூரத்தில் தடுக்க முயற்சி செய்யப்பட்டது. எனினும், இந்த முயற்சி இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி SBB தெரிவிக்கையில், “குறித்த பரிசோதனை திட்டத்தில், இனத்தைச் சார்ந்த தனிப்பட்ட ஒலிகளால் விலங்குகளை எச்சரிப்பது சாத்தியம்தான். ஆனால், இந்த அமைப்பை பரவலாகப் பயன்படுத்துவதற்கு கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகள் அவசியம். தற்போதைக்கு அவை நடைமுறையில் சாத்தியமில்லை.”

இதனால், ரயில்வே வலையமைப்பின் பிற பகுதிகளில் இந்த முறையை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் இல்லை. அதற்கு பதிலாக, கிடைக்கும் வளங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில், தற்போது (அம்பிபியன்கள்) தண்ணீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட இனங்களை பாதுகாப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்று SBB அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ரயில்கள் அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகள் வழியாகச் செல்லும் நிலையில், விலங்குகள் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் முற்றிலும் புதியதல்ல. இந்த பரிசோதனை திட்டம் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சிகளில் புதிய சாத்தியங்களை காட்டினாலும், தொழில்நுட்ப தடைகள் காரணமாக அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
© Keystone SDA