Saturday, May 4, 2024

பிரபல்யமான செய்திகள்

ஜெர்மனியில் தங்கள் குப்பைகளை கொட்டும் சுவிஸ் மக்கள்

spot_img

சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் ஜெர்மனியில் தங்கள் குப்பைகளை அகற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து இவ்வளவு சுத்தமான நாடாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதன் கழிவுகள் ஜெர்மனியில் தூக்கி எறியப்படுகின்றமை கவலையளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

353523d9026b8e371650a897af723caf e8a9785 data

சுவிஸ் எல்லை தாண்டி குப்பைகளை இரு முறைகளில் மக்கள் வீசிச்செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முதலாவதாக, ஜெர்மனிக்குச் சென்று கடையில் வாங்கிய பொருட்களிலிருந்து பேக்கேஜிங் போன்ற குப்பைகளை சட்டப்பூர்வமாக பலர் அகற்றிவிட்டு செல்கிறார்கள்.

இரண்டாவதாக ‘சுற்றுலாப் பயணிகள்’ என்ற போர்வையில் அவர்கள் தங்கள் குப்பைகளை ஜெர்மனியில் கொட்டும் நோக்கத்துடன் கொண்டு வருகிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இது உண்மையில் ஜெர்மனியின் அதிகாரிகனை தொந்தரவு செய்யும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. தொல்லைக்கு அப்பால், இந்த நடைமுறை சட்டவிரோதமானது எனவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

spot_img

பிராந்திய செய்திகள்

spot_img
spot_img