சூரிக்கில் திடீர் உடல்நலக்குறைவால் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் ஹீர் மரணம்
சுவிட்சர்லாந்தின் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த நீண்டகால பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பா கவுன்சிலின் பிரதிநிதியுமான தோமஸ் ஹீர், சூரிக் நகரில் திடீரென மரணமடைந்தார். நகர காவல்துறை உறுதிப்படுத்திய தகவலின்படி, புதன்கிழமை இரவு ஒரு மருத்துவ அவசர நிலை குறித்து அழைப்பு கிடைத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது ஹீர் உயிரிழந்திருந்தார். வழக்கமான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது கூடுதல் தகவல்கள் வழங்க இயலாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹீர் 1994ல் சூரிக் நகர சபை உறுப்பினராக அரசியலுக்கு அடியெடுத்து வைத்தார். பின்னர் மாநில கவுன்சிலராக பணியாற்றி, 2007ஆம் ஆண்டில் சுவிஸ் தேசிய சபை (House of Representatives) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 முதல் அவர் ஐரோப்பா கவுன்சிலிலும் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.
சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஹீர், குடியேற்றக் கொள்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் சுயாட்சி போன்ற தலைப்புகளில் உறுதியான நிலைப்பாட்டுக்காக அறியப்பட்டவர். அவரது திடீர் மரணம், தேசிய மட்டத்திலும் ஐரோப்பிய மட்டத்திலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© SwissInfo