ஜெனீவா ஏரியில் இடம்பெறவிருந்த நீச்சல் போட்டி திடீர் ரத்து : வெளியாக காரணம்.!!
ஜெனீவா ஏரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் பங்கேற்க இருந்த ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற “Lake Crossing” நீச்சல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் நீரின் வெப்பநிலை திடீரென ஆபத்தான அளவுக்கு குறைந்தமை என சொல்லப்படுகிறது.
2 கி.மீ தூரம் – விளையாட்டு மற்றும் நட்பின் அடையாளம்
இந்த போட்டி “விளையாட்டு மற்றும் நட்பு” எனக் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பாளர்கள் ஜெனீவா ஏரி கரை (Genève Plage )பகுதியில் இருந்து தொடங்கி, ஜெனீவா ஏரிக்கரை நீராடும் மையம் (Bains des Pâquis) வரையிலான சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தை நீந்திச் செல்வார்கள். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முறை மற்றும் ஆர்வலர் நீச்சல் வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

ஆபத்தான குளிர்ச்சி
ஆனால், ஏரியின் நீர் வெப்பநிலை 15.5 டிகிரி செல்சியசாகக் குறைந்தது. பாதுகாப்பான அளவுக்குக் குறைந்தபட்சம் 18 டிகிரி தேவைப்படும் நிலையில், இதற்குக் கீழே நீந்துவது உடலுக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதனால் ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மாற்று தேதிக்கான நம்பிக்கை
நிகழ்ச்சியை அடுத்த வாரம் நடத்தும் நோக்கத்துடன் ஏற்பாட்டாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். பங்கேற்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© WRS