மேற்கு சுவிட்சர்லாந்தில் புயல் வீசல் – பல இடங்களில் சேதம், அரசு எச்சரிக்கை
வியாழக்கிழமை மேற்கு சுவிட்சர்லாந்தில் கடும் காற்றுடன் கூடிய புயல் வீசியது. காற்றின் வேகம் மணிக்கு 132 கிலோமீட்டர் வரை பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசு அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மரங்கள் சரிந்ததால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
நியுஷாத்தெல் கான்டோனல் போலீஸ், செயோன் பள்ளத்தாக்கு பகுதியில் மரங்கள் விழுந்ததால் அந்தப் பகுதியை தற்காலிகமாக மூட வேண்டி வந்ததாக கூறியது. ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. லா ஷோ-து-ஃபொன்ஸ் முதல் பெசான்சோன், மற்றும் வெவே முதல் ஐகிள் வரை ரயில்கள் இயங்குவதில் தடைகள் ஏற்பட்டன. Biel – Moutier, மற்றும் asel and Laufen இடையேயும் சில நேரங்களில் தாமதத்துடன் ரயில்கள் இயக்கப்பட்டன.

ஜெனீவா நகராட்சியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பூங்காக்களையும் நடைபாதைகளையும் தற்காலிகமாக மூடிவைத்துள்ளது.
மத்திய அரசு வட ஆல்ப்ஸ் முழு பகுதிக்காக 5-ல் 3-வது நிலை புயல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது பல இடங்களில் மரங்கள் விழுதல், கூரைகளில் சேதம், மற்றும் தொடர்ச்சியான மழையால் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலைத் துறை தெரிவித்தது.
சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற புயல்கள் அடிக்கடி ஏற்படும் போதிலும், இந்த முறை பதிவான காற்று வேகம் கடந்த சில ஆண்டுகளில் காணாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிகாரிகள் மக்களை தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், வானிலை எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றவும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.