St.Gallen மாகாணம் : ஒற்றைக்குடும்ப வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து.!! செவ்வாய்கிழமை (நவம்பர் 19, 2024), மாலை 4 மணிக்கு சற்று முன்னர், ரெய்ஹெர்வெக்கில் உள்ள ஒரு குடும்ப வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 81 வயதான பெண் ஒருவர் நச்சுத்தன்மையுடைய புகையை சுவாசித்தமையினால் அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தீ விபத்தினால் சுமார் 200000 பிராங்குகளுக்கு மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குடும்ப வீட்டில் இருந்து கடுமையான புகை வருவதாக சென்ட்காலன் கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
81 வயதான குடியிருப்பாளரை பல நபர்களின் உதவியுடன் அவரது வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒற்றைக் குடும்பம் உள்ள வீடு தற்போது வாழத் தகுதியற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ட்காலன் கன்டோனல் பொலிஸின் பல ரோந்து படையினர் மற்றும் தீயணைப்புப் படைகளும் மருத்துவ நிபுணர்களும் ஒன்றிணைந்து மீட்பு சேவை மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
சென்ட் கேலன் மாகாணத்துக்கான அரசு வழக்கறிஞர் அலுவலகம் சார்பில், செயின்ட் கேலன் கன்டோனல் காவல் துறையின் தடயவியல் திறன் மையம் தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆதாரம்: St.Gallen Cantonal Police