St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை.! 45,000 பிராங்குகள் கொள்ளை.! சுவிற்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில வாரங்களாக போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான பல செய்திகளை SwissTamil24.Com உடனுக்குடன் பிரசுரித்திருந்தோம். தற்போது St.Gallen நகரில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் வயதானவர்களை ஏமாற்றும் கும்பல் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் :-
St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை
செவ்வாய்கிழமை மதியம் (பிப்ரவரி 7, 2023), 66 வயதான பெண் ஒருவர், “அதிர்ச்சி தரக்கூடிய தொலைபேசி அழைப்பு” ஒன்றின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளார், இனந்தெரியாத நபர் ஒருவரிடம் 45,000 பிராங்குகள் மதிப்புள்ள பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த 66 வயதான பெண், போலீசாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் :-
அடையாளம் தெரியாத அழைப்பாளர், மகள் ஒரு பயங்கரமான விபத்தை செய்துவிட்டு ஓடிவிட்டதாக கூறினார். இப்போது வைப்புத் தொகையாக 60,000 செலுத்த வேண்டும். St.Gallen நகரில் உள்ள ஒருவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
சிறிது நேரம் கழித்து, தெரியாத ஒரு மனிதரிடம் 45,000 பிராங்குகளை ரொக்கமாக கொடுத்ததாகவும் கூறிய அவர் பின்னர்தான் தான் ஏமாற்றுப்பட்டுவிட்டதை உணர்ந்ததாகவும் போலீசாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை
St.Gallen இல் உள்ள கன்டோனல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதே நாளில், இது போன்ற பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் St.Gallen கன்டோனல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்கள். இருப்பினும், ஒருவரைத்தவிர யாருடைய பணமும் சொத்துக்களும் பறிபோகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
போலி போலீஸ் அதிகாரிகளால் ஏமாற்றும் முயற்சிகள் இன்னும் மீண்டும் மீண்டும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. மக்கள் எவ்வாறு இதில் சிக்குகிறார்கள் என்பதும் புரியாமல் இருக்கிறது. நன்கு திட்டமிட்ட முறையில் தனிமையில் இருக்கும் வயோதிபர்களை குறிவைத்தே இந்த கும்பல் செயற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
St.Gallen நகரிலும் “போலி போலீசார்” கைவரிசை
இத்தகைய அழைப்புகளுக்கு எதிராக St.Gallen கன்டன் காவல்துறை எச்சரித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்கள்.
காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர் உங்களை பணம், நகை அல்லது பிற பொருட்களை வைத்திருக்கும்படி ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
அதேபோல, அன்புக்குரியவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்துக்குப் பிறகு, சட்ட அமலாக்கம் ஒருபோதும் உங்களிடம் ஜாமீன் கேட்காது.
சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அவசரகால எண் 117 க்கு தகவல் தெரிவிக்கவும்.
அந்நியர்களுக்கு உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி சூழ்நிலைகள் பற்றிய எந்த தகவலையும் வழங்காதீர்கள்.
அந்நியர்களுக்கு ஒருபோதும் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை கொடுக்க வேண்டாம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களை எச்சரிக்கவும்.
இதையும் படியுங்க :- சுவிற்சர்லாந்து சொலுத்தூர்ன் மக்களுக்கு போலீசார் அவசர எச்சரிக்கை ..!!
இதுபோன்ற சம்பவங்கள் சென்ட்காலன் கன்டோனில் மாத்திரம் இல்லாமல் மேலும் பல மாநிலங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.