சுவிஸில் சிறிய ரக விமானம் விபத்து : வெளியான நேரடி காட்சிகள்
சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள வெவே அருகே ஜெனீவா ஏரியில் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இருவரும் மூழ்கிய விமானத்தில் இருந்து காயங்கள் இன்றி தப்பினர். விமானம் ஏரியின் அடிப்பகுதியில் மூழ்கியது.
இந்த விபத்து கோர்சோவில் உள்ள பிசெட் கடற்கரையில் நிகழ்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானம் ஏரியில் விழுந்ததற்கான துல்லியமான காரணம் காவல்துறைக்கு இன்னும் தெளிவாகவில்லை.

விமானம் ஏரியை நெருங்கி நீரில் தரையிறங்க முயல்வது, பின்னர் முன்னோக்கி சாய்ந்து நீருடன் தொடர்பு கொண்டவுடன் தலைகீழாக மாறுவது உள்ளிட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
விமானம் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம் என காவல்துறை உறுதிப்படுத்தியது. விமானத்தில் இருந்த இருவரும் விமானத்திலிருந்து வெளியேறி, அவர்களை மீட்க வந்த தனியார் படகில் ஏற முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
@KeystoneSDA